காலாவதியான க்ரீம்கள் விற்பனை செய்த இரண்டு மாடி கடைக்கு சீல்

கொழும்பு 07 இல் அமைந்துள்ள Odel வர்த்தக நிலையத்திலிருந்து அகற்றப்பட்ட காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த அத்துருகிரிய பிரதேசத்தில் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகாரசபை நேற்று (08) நடவடிக்கை எடுத்துள்ளது. சோதனையின் போது மீட்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More …

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது. தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான Read More …