IPL 2024 RCB vs PK: வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் RCB

வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் RCB

இன்று (25) ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்துகிறது வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில்

இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் பெங்களூரு தோல்வியடைந்தது. எனவே இன்றைய போட்டியில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வெற்றிக் கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

வெற்றி

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக விளையாடினர். பஞ்சாப் அணிக்கு எதிராக அவர்களிடமிருந்து மற்றொரு சிறந்த ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் விராட் கோலியின் வழக்கமான அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதேபோல் ரஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோரும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

முகமது சிராஜ், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், கரண் ஷர்மா, கேமரூன் கிரீன் ஆகியோர் பந்துவீச்சைக் கவனித்துக் கொள்வார்கள். முதல் போட்டியில் கேமரூன் கிரீன் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, இந்த ஆட்டத்தில் தங்களது முழுத் திறனை வெளிப்படுத்தி முதல் வெற்றியை ருசிக்க பெங்களூரு வீரர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் வெற்றியை நோக்கி சவாரி செய்கிறது.

ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரண், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளனர். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கரனும், லிவிஸ்டனும் அபாரமாக விளையாடி அணிக்கு வெற் றியை பெற்று தந்தனர். அவர்களிடமிருந்து மற்றொரு சிறந்த பேட்டிங் இந்த போட்டியில் வெளிப்படும்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ் தீப் சிங் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்

Leave a Reply