20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளில் ஆரம்பம்
தரம் 08 க்கு மேல் உள்ள மாணவர்களுக்கான IT பாடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தரம் 8க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த AI முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த 20 மாவட்டங்களில் 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நவீன வகுப்பறைகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
இதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குழுவொன்று தொழில்நுட்ப ரீதியாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உதவிகளை வழங்கவுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைக்ரோசாப்ட் நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக மைக்ரோசாப்ட் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய AI தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவையும் வழிகாட்டலையும் மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் பிராந்திய தலைவர் புனித் சந்தோக் பாராட்டினார்.
இந்த வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், இலங்கை மக்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனவும் இதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த சுயேச்சைக் குழுக்களுக்கு ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சாகல ரத்நாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தர்மசிறி குமாரதுங்க மற்றும் குழுவினர். மைக்ரோசாப்ட், கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், புசல்லாவ இந்து தேசிய கல்லூரி, தங்காலை மகளிர் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு வழங்கள்