துருக்கி யில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முக்கிய மேயர் பதவிகளாக கருதப்படும் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் எர்டோகன் கட்சி நிறுத்திய வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்கின்றனர்.
இஸ்தான்புல்லில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய மேயர் எக்ரெம் இமாமோக்லு முன்னிலை பெற்றுள்ளார். அங்காராவில் மன்சூர் யாவாஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 81 மாகாணங்களில் 36 மாகாணங்களில் குடியரசுக் கட்சி மக்கள் கட்சி (CHP) முன்னிலை வகிக்கிறது. எர்டோகன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சியிடம் இழந்த நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை மீண்டும் பெறுவதன் மூலம் தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்றார். ஆனால் எர்டோகன் மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.
70 வயதான எர்டோகன் 1994 இல் இஸ்தான்புல் நகரின் மேயர் பதவியை வென்றதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் அவரது அரசியல் வாழ்க்கை ஜனாதிபதியாக உயர்ந்தது.
துருக்கியில் ஒரு புதிய அரசியலை நிறுவ வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று (நேற்று) 22 ஆண்டுகளாக துருக்கியின் உருவத்தை மாற்ற வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர். “நமது நாட்டில் ஒரு புதிய அரசியல் சூழ்நிலைக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது,” என்று CHP தலைவர் ஓஸ்குர் ஓசெல் கூறினார்.