அரசியலில் களமிறங்கும் சானியா மிர்சா தெலுங்கானா மாநிலத்தில் 17 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலிலும் பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனையும், எம்பியுமான ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான சானியா மிர்சாவை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒருவேளை சானியா மிர்சா அல்லது அவரது தந்தை இம்ரான் மிர்சா களமிறக்கப்படலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.