நாட்டிற்குள் உலகளாவிய இயற்கையான மற்றும் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள சரியான திட்டத்தை வைத்திருப்பது அவசியம். மேலும் இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளுக்கு உதவுவதற்கான திறனை நாம் உருவாக்க வேண்டும்.
மாத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படைக்கு விஜயம் செய்த போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை பொறியியலாளர் படையின் உலகளாவிய சிறப்புத் திறன்கள் மற்றும் தயார்நிலையை அவதானிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் செவ்வாய்கிழமை (மார்ச் 26) மாதேகொடவில் உள்ள இலங்கை இராணுவ பொறியியலாளர் படைக்கு விஜயம் செய்தார்.
மாதேகொடவில் உள்ள இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படைக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சரை இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியும், இலங்கை பொறியியலாளர் படையின் கர்னல் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்தன வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் ராணுவ தளவாடங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிமருந்து அகற்றல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் திறன் மற்றும் இராணுவப் பொறியாளர் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கமும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
மேலும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிகுண்டு அகற்றல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் மேலாண்மை கருவிகள் மற்றும் உபகரணங்களை பார்வையிட்ட அமைச்சர் தென்னகன், அது தொடர்பான செயல்விளக்கங்களைக் கேட்டறிந்தார்.
நிர்மாணத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி குழு நியமனம்