அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது அமெரி க்க உதவியுடன் மேற்கொள்ளப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இளைஞர்களை இத்துறையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அமெ ரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

 

எகிப்தில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

Leave a Reply