உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26 ஆரம்பம்
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாட்டை மார்ச் 26, 2024 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. Enable – Empower – Enrich என்பதன் அடிப்படையில், இந்த மாநாடு, டிஜிட் டல் பொது உள்கட்டமைப்பின் உருமாறும் திறனைப் பயன்படுத்தி, சேவையை வழங்குதல், அதிகாரமளித்தல் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுமையின் மூலம் பொருளாதாரத்தை வளப்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்கிறது.
மாநாடு அறிமுக அமர்வுடன் ஆரம்பமாகவுள்ளதுடன், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டு குழு விவாதங்கள் நடைபெறும். “விரைவுபடுத்தும் டிஜிட்டல் ஸ்ரீலங்கா” என்ற தலைப்பிலான முதல் கலந்துரையாடல், டிஜிட்ட ல் பொது உட்கட்டமைப்பு எவ்வாறு நிர்வாகத்தை எளிதாக்குவது மற்றும் இந்தச் சேவைகளை மக்கள் இலகுவாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்கிறது. மேலும், “டிஜிட்ட ல் ஸ்டேக்கைத் திறத்தல்” என்ற தலைப்பில் இரண்டாவது குழு விவாதம், முதல் அடுக்கு தளங்கள், இணைப்புத் தொழில்நுட்பம், சந்தைகள் மற்றும் ஆளுகை உள்ளிட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
இந்த இரண்டு அமர்வுகளையும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஆரம்பித்து வைக்கவுள்ளனர். டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் முன்னோக்கு மற்றும் சிறந்த அறிவையும் அனுபவத்தையும் வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் உள்ள இந்திய மற்றும் இலங்கை நிபுணர்கள் இரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார்கள். மேலும், இந்த மாநாட்டை மார்ச் 26 காலை 09.30 மணி முதல் https://youtube.com/live/0mfxUibO3-g என்ற முகவரியில் நேரடியாகப் பார்க்கலாம்.
2 மில்லியன் பேருக்கு காணி உரிமை ஜூனில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு