ஏனைய மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில்வே சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
இது தவிர நாளை 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு…
ஏப்ரல் 14 – மாலை 3.30 – பெலியாத் முதல் கோட்டை வரை
ஏப்ரல் 14 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 6.00 மணி – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 8.10 – பெலியாத் முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – பிற்பகல் 1.50 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை 6.15 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை 7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – அலுவலக ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்