தற்காலிக சாரதி உரிமம் பெற்றவர்களுக்கான அறிவித்தல்

தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்ற ஓட்டுனர்களுக்கு நிரந்தர ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி துவங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 03 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணிகள் நிறைவடையும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் 10,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் குறித்த சாரதிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன அனுமதிப்பத்திரத்தில் உள்ள மாகாண எழுத்துக்களை அகற்றும் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

வலுவான பொருளாதாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை ஊட்டுகிறது

Leave a Reply