ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர் தல் கள் ஒரே நாளில் நடைபெறுவதை தேர் தல் முறை தடுக்கிறது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு முழுவதும் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு மட்டுமே வெளியிடப்படும். எவ்வாறாயினும், பொதுத் தேர்தலுக்காக 22 தேர் தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்தார்.
மேலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்துவது குறித்தும், அதில் வாக்களிப்பது குறித்தும் நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே முக்கிய பிரச்னையாக உள்ளதாக தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர் தல் ஆணையத்தின் படி, பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்த ல்களை ஒரே நாளில் நடத்த முடியாது.
வலுவான பொருளாதாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை ஊட்டுகிறது