ஏப்ரலில் 10 கிலோவும், மே இல் 10 கிலோவும் வழங்க திட்டம்
குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபித்ய தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாதம் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்துக்கான 10 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மே மாதத்துக்கான அரிசி இம்மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளத்தை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.