2024 இன் முதல் சந்திரகிரகணம் இன்று

பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வரும் கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை உலக மக்கள் இன்று (25) காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் தவிர, பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திர கிரகணம் வருவதாலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திரகிரகணம்

சூரியன், சந்திரன் மற்றும் பூமி அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, ஒரு கிரகணம் ஏற்படுகிறது.

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் முன்னால் செல்லும்போது, சூரியனின் நேரடி ஒளி சந்திரனை அடையாமல் தடுக்கிறது, இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இன்று காலை 10.23 மணி முதல் மாலை 04.39 மணி வரை சந்திர கிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை நேரப்படி பகலில் சந்திரகிரகணம் நிகழும் என்பதால் அதனை இலங்கையர்கள் காண முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் இந்த நிலவின் கட்டத்தை அமெரிக்கா, ஜப்பான், அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், தெற்கு நார்வே, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் காணலாம்.

 

பொதுநலவாய போட்டிகளை மலேசியா ஏற்று நடத்த மறுப்பு

Leave a Reply