ரெய்னாவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

T20 இல் அதிக பிடியெடுப்புகளை எடுத்த இந்திய வீரராக பதிவு

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (25) எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டினார்.

இந்நிலையில், டி20 போட்டிகளில் சென்னையின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தனித்துவ சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

கிரிக்கெட்டில் பிரபலமான விராட் கோலி தற்போது பீல்டிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார். இதன்படி டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.

முன்னதாக கோஹ்லியும், ரெய்னாவும் தலா 172 கேட்ச்களை எடுத்திருந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் கேட்ச்சை எடுத்து ரெய்னாவின் சாதனையை கோஹ்லி முறியடித்தார்.

கோஹ்லி மற்றும் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 167 கேட்சுகளுடன் மூன்றாவது இடத்திலும், மனிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 146 மற்றும் 136 கேட்ச்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டு டி20 கிரிக்கெட்டில் 362 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 290 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்திலும், டுவைன் பிராவோ, சோயப் மாலிக் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் முறையே 271, 225 மற்றும் 221 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 

திரைப்படம் ஓபன்ஹைமர் 7 ஒஸ்கார் விருது பெற்றது

Leave a Reply