யாழ் சர்வதேச விமான நிலையம் தனியாருக்கு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து புதிய ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான யோசனை நிதி அமைச்சின் அவதானத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் விலகல்

Leave a Reply