இரண்டு வாரங்களில் முட்டை விலை குறையும் என சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவிதார்
சந்தையில் அதிகரித்துள்ள உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டைக் கோழிகளுக்குத் தேவையான வைட்டமின்கள், மருந்துகள், கோழித் தீவனங்களின் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்படி முன்பு 38 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்ட முட்டை தற்போது 43 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.
இதேவேளை, சந்தையில் மரக்கறிகள், இறைச்சி, மீன் மற்றும் உலர் பழங்களின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளமையினால், நுகர்வோரின் முட்டை பாவனை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திலிருந்து இரண்டு வாரங்களின் பின்னர், நுகர்வோர் 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.