மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பகுதிக்கு அமைச்சர் விஜயம்

நெடுஞ்சாலையை பார்வையிட அமைச்சர் விஜயம்

பொத்துஹெர முதல் கலகெதர அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் பொத்துஹெர தொடக்கம் ரம்புக்கன வரையான பகுதிகளுக்கு போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

அதிவேக

பொடுஹெர லிஹினிகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைத்திட்ட அலுவலகத்திற்கு அமைச்சர் விஜயம் செய்ததுடன், தற்போதைய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள், பொத்துஹெர இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன், வடகட, துருவியனா-பூல்கொல்ல, தொம்பேமட போன்ற பல இடங்களையும் பார்வையிட்டனர். அங்கு தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 32.45 கிமீ தூரம் கொண்ட மத்திய விரைவுச் சாலையின் மூன்றாம் கட்டம் நான்கு புறவழிச்சாலைகளைக் கொண்டுள்ளது. 29 பில்லியன் ரூபா செலவில் இந்தப் பகுதியை 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாகவும், தற்போது 52 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

2 மில்லியன் பேருக்கு காணி உரிமை ஜூனில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply