மதீஷவின் பந்து வீச்சில் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (14) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷவின் பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
அந்த அணி சார்பாக சிவம் துபே ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 69 ஓட்டங்களையும், இறுதியாக களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 04 பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசி 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார்.