பேருந்து கட்டண திருத்தம் குறித்து தற்போது பரிசீலிக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் பஸ்கள் பயன்படுத்த முடியும் எனவும் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் தற்போதைய டீசல் விலை அதிகரிப்பு 4 வீதத்தை தாண்டவில்லை எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
லங்கா ஆட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.