பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய்

வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார்

பிரித்தானிய இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இளவரசி

காணொளி மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பல கடினமான மாதங்களுக்குப் பிறகு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் நான் நன்றாக இருக்கிறேன், ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறேன், என்றார்.

இளவரசி பூரண குணமடைவார் என கென்சிங்டன் அரண்மனை நம்பிக்கை வெளியிட்டுள்ளது, எனினும் அவரது நோய் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்டிருந்த போது நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தேனா என்பது தெரியவில்லை எனவும், அறுவை சிகிச்சைக்கு பின்னரான மருத்துவ பரிசோதனையில் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை பிப்ரவரியில் தொடங்கியது – கென்சிங்டன் அரண்மனை சிகிச்சை பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடாது என்று கூறியது.

இந்த நேரத்தில் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று இளவரசி கேட் (42) கூறியுள்ளார். இந்த வகை நோயை நீங்கள் எந்த வடிவத்தில் எதிர்கொண்டாலும், நம்பிக்கையை இழக்காதீர்கள், நீங்கள் தனியாக இல்லை.

 

இலங்கைல் 10பேருக்கு உம்ரா கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

Leave a Reply