நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான்

நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஈரானும் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஏற்கனவே மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், மற்றொரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை இஸ்ரேல் சமாளித்தது. பெரிய நாடாக இல்லாவிட்டாலும், புவிசார் அரசியலில் குழப்பத்தை உருவாக்கியது.

இதேவேளை நெருப்புடன் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களைக் கூட பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நொடிகளில் பதிலடி கொடுப்போம் என்று கூறி இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஈரான். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். 24 மணி நேரத்திற்குள் பெஞ்சமின் நெதன்யாகு நடத்திய இரண்டாவது சந்திப்பு இதுவாகும். பழிவாங்கும் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றாலும், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் நெருப்புடன், அமெரிக்க உயர் அதிகாரி ஸ்டீவ் ஸ்கலிஸுடனான தொலைபேசி உரையாடலில் இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்தையும் செய்யும் என்று நெதன்யாகு கூறியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் என்ன செய்தாலும் பதிலடி கொடுக்க ஈரானும் தயாராக உள்ளது.

இதுகுறித்து நெருப்புடன் ஈரான் கமாண்டர் கூறுகையில், எங்களால் என்ன செய்ய முடியும் என ஆய்வு செய்து வருகிறோம். பதிலடி தாக்குதல் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவுவதாக இருக்கும். சரியான நேரத்தில் பாரிய பதிலுக்காக காத்திருக்கிறோம்,” என்றார்.

நேற்று, நெதன்யாகு தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். ஆளில்லா விமானங்களுக்கு பதில் அளிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து தீவிர விவாதம் நடந்தது. எனினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

எனினும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளதால் இஸ்ரேல் பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நிலைமையை மோசமாக்கக் கூடாது என்று அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகள் கூறியுள்ளன. ஈரானுக்கு இடையேயான போரை இஸ்ரேல் விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்கா, பிராந்தியத்தில் அமைதியை விரும்புவதாக கூறியுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதலில் உயர்மட்டத் தளபதிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாக ஈரான் சனிக்கிழமை இரவு பதிலடி கொடுத்தது.

 

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Leave a Reply