எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கான கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலப்பகுதியில், அனர்த்தம் மற்றும் அவசர அத்தியாவசிய பணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் இந்த விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி பேணக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.