திடீரென இரத்தான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

வீடுகளுக்கு திரும்பிய 100 இலங்கைத் தொழிலாளர்கள்

கொரியாவில் பணிபுரிய 100 இலங்கை பணியாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இலங்கை விமானம் திடீரென தாமதமாக ரத்து செய்யப்பட்டதால் அவர்களின் வேலை கனவுகள் சிதைந்து நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் இந்த 100 பணியாளர்களும் நேற்று (19) இரவு கொரியா செல்லவிருந்தனர்.

விமானம் திடீரென தாமதம் ஆனதால் விமான நிலையத்தில் மிகவும் குழப்பமான சூழல் ஏற்பட்டு கடைசியில் விமானம் ரத்து செய்யப்பட்டு அனைவரும் திரும்பி சென்றனர்.

குறித்த குழுவை குறித்த நேரத்தில் அனுப்ப முடியாத காரணத்தினால் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை இந்த குழுவை கொரியாவிற்கு அனுப்ப வேண்டாம் என கொரியாவின் மனித வள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

100 பேர் கொண்ட குழுவில் 6 பேர் கொரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

தொழுநோய் கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Leave a Reply