தாய்வானில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் கிழக்குப் பகுதியில் இன்று (03) ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலை எழ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் 34.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தைவான் நிலநடுக்க ஆய்வு மையம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக மாற்றியமைத்துள்ளது.

தைவானில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999 இல், தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.

தைவானின் கிழக்கு நகரமான Hualien இல் கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தைபேயில் சுரங்கப்பாதை சேவை மற்றும் தீவு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹுவாலியன் நகரில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுப்பிப்பு – தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலக சாக்லேட் தொழில் பெரும் நெருக்கடியில்

Leave a Reply