ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இனவாதம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மத, இன வேறுபாடுகள் மீண்டும் தலைதூக்கக்கூடும் எனவும், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும், பௌத்தம் மற்றும் இஸ்லாம் அடிப்படையில் மோதலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாட்டலி ரணவக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலு க்கு அருகில் இவ்வாறான அழிவுச் சக்திகள் மீண்டும் செயற்படக்கூடும் எனவும், இவ்வாறான இன, மதப் பிளவுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி

Leave a Reply