சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் 3வது பிரதமரான இவர், கடந்த 2004ம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.சமீபத்தில் இந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதனிடையே, பிரதமர் லீ சி யெனும் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாட்டின் புதிய பிரதமர் பதவி விலகும் அன்றே பதவியேற்பார் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் ராஜினாமா அறிவிப்பை சிங்கப்பூரர்கள் வரவேற்றுள்ளனர்.