2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச மிளகுச் சங்கத்தின் வருடாந்த மாநாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1972 ஆம் ஆண்டில், உலகின் முக்கிய மிளகு உற்பத்தி நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் சர்வ தேச மிளகு சமூகத்தை நிறுவின.
உறுப்பு நாடுகளிடையே மிளகு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆராய்ச்சி முடிவுகள் பரிமாற்றம், பாரம்பரிய மற்றும் புதிய சந்தைகளுக்கான திட்டங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல், சர்வ தேச வர்த்தகத்தில் சுங்க மற்றும் கட்டணமற்ற தடைகளை தளர்த்துவதற்கான ஒத்துழைப்பை நிறுவுதல். மிளகுச் சங்கத்தின் 52ஆவது சர்வ தேச மாநாட்டை இவ்வருடம் இலங்கையில் நடத்துவதற்கு விவசாயம் மற்றும் தோட்டக்கலை அமைச்சரினால் முன்மொழியப்பட்டது.