நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கலந்துரையாடல் ஒன்றை நடத்த தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுனில் ஹந்துன்நெதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பான கலந்துரையாடலுக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுனில் ஹந்துன்நெதி, இந்த அழைப்பை தாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த விவாதம் பலனளிக்கும் பட்சத்தில் ஊடகங்களில் வாசிப்பதற்கு பதிலாக எழுத்துமூல அழைப்பை கோருவதாகவும் சுனில் ஹந்துன்நெதி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை விவாதத்திற்கு அழைக்கும் ஹர்ஷ, எரான், கபீர் போன்றவர்கள் இருப்பதால், அநுர, சஜி த் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களை நேரடியாகக் கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டால் எழுத்து மூலம் தெரிவிக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கேட்ட சுனில் ஹந்துன்நெதி, விவாதத்தை எப்படி நடத்துவது என்பதை பின்னர் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.