கிராமங்களுக்குச் சென்ற மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கிராமங்களுக்குச் சென்ற மக்களுக்காக இன்று (15) மற்றும் நாளை (16) விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகையிரதத்தில் வரும் பயணிகளின் வசதிக்காக சில விசேட புகையிரத பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபோலகே தெரிவித்தார்.

 

இஸ்ரேல் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

Leave a Reply