ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் பிரிமியர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமனில் நடந்து வருகிறது. நேற்று அல் அமிரத்தில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவ ரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் கம்ரான் கான் வீசிய கடைசி ஓவ ரில் அந்த அணியின் திபேந்திர சிங் ஏரே சிக்சர் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை திபேந்திர சிங் பெற்றார்.
இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), மேற்கிந்திய தீவுகளின் பொல்லார்டு (2021) ஆகியோர் ஏற்கனவே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தீபேந்திர சிங் 9 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.