இலங்கை இருபதுக்கு 20 அணித்தலைவர் வனிந்து ஹசரன் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு இலங்கை கிரிக்கட் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வனிந்து ஹசரங்கவின் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிகிச்சைக்காக துபாய் சென்ற அவர், இந்த நேரத்தில் ஓய்வெடுப்பதே சிறந்தது என நிபுணர்களிடம் இருந்து ஆலோசனை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.