உலகின் மிகவும் சுவையான பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet pine apple (Ananas Comosus) அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
MD 2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி இருந்தாலும், நாட்டில் அன்னாசி வகையை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அந்த அன்னாசி வகையை இலங்கையில் வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே எம்.டி 2 வகை அன்னாசிப்பழத்தை உடனடியாக பயிரிட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.