உலகின் மகிழ்ச்சியான 143 நாடுகளில் இலங்கை 128ஆவது இடத்தில்
உலகின்மகிழ்ச்சியான நாடாக என்ற பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 2024 ஆம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் டென்மார்க் மற்றும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து, சிறிய மக்கள் தொகை கொண்ட பல சிறிய நாடுகள் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
குவைத் மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் பத்து ஆண்டுகளில் முதல் முறையாக உலகின் முதல் 20 மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக இல்லை.
143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 128ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், இந்தியா, பாகிஸ்தான், கென்யா, உகாண்டா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளும் இலங்கையை விட முன்னணியில் உள்ளன.
உலகின் முதல் 10 மகிழ்ச்சியான நாடுகள்
1. பின்லாந்து
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. ஸ்வீடன்
5. இஸ்ரேல்
6. நெதர்லாந்து
7. நார்வே
8. லக்சம்பர்க்
9. சுவிட்சர்லாந்து
10. ஆஸ்திரேலியா