அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சுக்கு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை நேற்று (26) அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இங்கு மேலும் கருத்து தெரிவித்தார்.
2021-, 2022 ஆம் ஆண்டிற்கு, உயர் நிலையை அடைந்த மாணவர்கள் 17 பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த ஆண்டுகளில் மாணவர்களை இணைக்கும் பணி திட்டமிட்டபடி நடக்கவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்பதை உறுதிப்படுத்த என்னிடம் முறையான ஆவணங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சில பிரச்சினைகளினால் சில பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு மாணவர்கள் குறித்த நேரத்தில் படிப்பை முடிக்க முடியாமல் இன்னும் பல்கலைக்கழகங்களில் தங்கியுள்ளனர். விரிவுரைகள் மற்றும் நடைமுறைகளை நடத்துவதற்கு போதிய வகுப்பறை வசதிகள் இல்லை.
ஆனால் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க சில மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இரத்மலானை பிரதேசத்தில் இருந்து மகாவலி மற்றும் களனி பகுதியில் இருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடம்