ஈரான் மீது அடுக்கப்படும் பொருளாதார தடை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. எதிர்பாராத விதமாக, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் சில ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் தான் என்பது உலகம் முழுவதும் தெரியும். எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 1ம் தேதி ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஏப்ரல் 14 இரவு, 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அமெரிக்கா ஏற்கனவே உணர்ந்திருந்தது. எனவே இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. ஆனால், இதையும் மீறி ஈ ரான் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், தனது எச்சரிக்கையை மீறியதற்காக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. பிரிட்டனும் அமெரிக்காவுடன் கைகோர்த்து பொருளாதார தடையை அறிவித்தது. இது குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் கூறுகையில், ஈரானுக்கு எதிராக வரும் நாட்களில் கூடுதல் பொருளாதார தடைகளை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

ஈரா ன் உலகிற்கு அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதனை பாதிக்கும் வகையில் பொருளாதார தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஈரானின் ராணுவ நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சித்து வருகிறது. பிரிட்டன் தனது பொருளாதார தடைகளை விரைவில் விவரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

முதலில் தாக்கியது இஸ்ரேல். இது உலகம் அறிந்த ரகசியம். ஆனால் இஸ்ரேலைக் கண்டிக்காமல் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததற்காக ஈரா ன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறதா? என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

பிரதமர் மோடிக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு

Leave a Reply