இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் தாக்குதலால் இடையே போர் மூளும் வேளையில், அழிவு விமானம் என்று அழைக்கப்படும் டூம்ஸ்டே விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு டூம்ஸ்டே விமானம் என்பது அணு ஆயுதப் போர், தாக்குதலால் பேரழிவு அல்லது பெரிய அளவிலான போரின் போது தப்பிக்க முக்கிய தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் விமானம் ஆகும், இது முக்கியமான இராணுவ மற்றும் அரசாங்க உள்கட்டமைப்பை அச்சுறுத்துகிறது. இந்த அணு ஆயுத விமானம் பெரிய ரேடார் ஏய்ப்பு திறன் கொண்டது.
அந்த விமானம் இஸ்ரேலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விமானங்கள் பொதுவாக முக்கியமான தாக்குதல்களைத் தாங்கும் திறன் கொண்டவை. மேலும் விமானத்தின் உள்ளே சில நாட்கள் பாதுகாப்பாக இருக்க வசதிகள் இருக்கும்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் வேளையில், அழிவு விமானம் என்று அழைக்கப்படும் டூம்ஸ்டே விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரும், ஜனாதிபதியும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் போர் பெரிதாகிறதா என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை தளங்கள் மீது நேற்று இரவு ஈரான் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதனை சமாளிக்க இஸ்ரேல் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. எனினும், இதையும் மீறி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.
ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு நடுவே, நாஸ்டர்டாம்சின் திகிலுட்டும் கணிப்பு