இலங்கை கிரிக்கெட் மீண்டும் உலகில் சிறந்து விளங்கும் என நம்புவதாகவும், அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மேலும், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, விளையாட்டுக் கழகங்களில் அரசியல்வாதிகள் உயர் பதவிகளை வகிப்பதைத் தடுக்க முடிந்தால் நல்லது என்றும் கூறினார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (28) நடைபெற்ற சிங்கள விளையாட்டு சங்கத்தின் (SSC) 125வது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
விளையாட்டுக் கழகங்களில் அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகளை வழங்காமல் இருப்பது அனைவருக்கும் நல்லது என நம்புகிறேன். அதேபோல், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டிய தருணம் இது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.