முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களும் ரஷ்ய இராணுவ த்தில் சேர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் இணைவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது என்றும், பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்ஜசீரா செய்திச் சேவை, ரஷ்ய இரா ணுவத்தில் இணைந்து கொண்ட இலங்கை இ ராணுவத்தைச் சேர்ந்த இருவர் அண்மையில் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டதுடன், அது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது.
எனினும், இலங்கை இரா ணுவத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தூதரகங்கள் ஊடாக நாட்டுக்கு அறிவிக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இரா ணுவத்தினருக்கும் ரஷ்ய இராணுவத்தினருக்கும் இடையில் இலங்கை இரா ணுவத்தினரை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு உடன்பாடு எட்டப்படாததன் பின்னணியில் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய இரா ணுவத்துடன் இணைந்து கொள்ள வேண்டாம் என இலங்கை இரா ணுவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் இரா ணுவத் தளபதி உட்பட மூவர் உயிரிழந்ததாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.