இறக்குமதி செய்யப்படும் பால்மா வின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பால்மா இறக்குமதியாளர்கள் 400 கிராம் ஒன்றின் விலையை 60 ரூபாவாலும், கிலோவுக்கு 150 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுத்தனர்.
சந்தையில் தற்போது பால் மா பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் நேற்று (24) அறிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 250 முதல் 350 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 140 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிக்கைக்கும் பால் இறக்குமதியாளர் மன்றத்திற்கும் தொடர்பில்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.