கூகுளிற்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்
கூகுளின் ஜீ மெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற மின்னஞ்சல் வசதியை எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் இயங்குதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கூகுளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
X இன் பாதுகாப்பு பொறியியல் குழுவில் பணிபுரியும் Nathan McGrady, X-mail அறிமுகப்படுத்தப்படும் போது ட்வீட் செய்தார்.
அதன் வருகைக்கு ‘இட்ஸ் கம்மிங்’ என பதில் ட்வீட் செய்துள்ளார் மஸ்க். இதன் மூலம் எக்ஸ்-மெயில் எனப்படும் இ-மெயில் சேவை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.