இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம்

யால தேசிய பூங்காவிற்கு 100,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டின் தேசிய பூங்காக்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தே சிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, உடவலவ, மின்னேரியா, கௌதுல்ல போன்ற தே சிய பூங்காக்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பால் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடிக்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தே சிய பூங்காக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகில் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிட நடவடிக்கை

Leave a Reply