அமெரிக்காவில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, குப்பைகளை அகற்றுவதற்காக, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோர் கொண்டு வரப்பட்டது.
நாட்டின் பரபரப்பான துறைமுகத்தில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளுக்கு மத்தியில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால் நான்கு தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டாலர் மத்திய அரசின் அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாலம் இடி ந்து விழுந்ததற்கான காப்பீடு கோரிக்கைகள் $3 பில்லியனைத் தாண்டும் என்றும் வெளிநாட்டு அறிக்கைகள் கூறுகின்றன.