ஆசிரியர் பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் 29ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அகில இலங்கை ஆசிரி யர் கல்வியாளர் சேவை நிபுணத்துவ சங்கம் தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை எனவும், எனவே அதனை வெற்றிகொள்ளும்
நோக்கில் பணிப்புறக்கணிப்பை தொடர தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க மிரிஹான தெரிவித்தார்.